×

கும்பகோணத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்

கும்பகோணம்: கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், னிவாச இராமானுஜன் மையத்தின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சிறப்பு இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை னிவாச இராமானுஜன் மைய புலத்தலைவர் ராமசாமி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். கும்பகோணம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சுபான் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச சித்த மருத்துவ முகாமில் சுமார் 95 பயனாளர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் சிவபுரம் ஊராட்சி தலைவர் வேம்பு, செயலர் சங்கர், கல்லுாரியின் முன்னாள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வைத்திய சுப்பிரமண்யத்தின் அறிவுறுத்தலின்படி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் கணேசன், வெங்கடேஷ், ரம்யா ஆகியோர்செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது….

The post கும்பகோணத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Siddha Medical Camp ,Kumbakonam ,Kumbakonam Shastra Online University ,Nivasa Ramanujan Center ,Dinakaran ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...